மக்களே மாநகராட்சி மேயரை நேரடியாக தேர்வு செய்ய மீண்டும் முடிவு!
மாநகராட்சி மேயரை மக்களே நேரடியாக தேர்வு செய்ய மீண்டும் முடிவு செய்யப்பட்டு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது .
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர்களை நேரடியாக தேர்வு செய்யும் நடைமுறை ஏற்கனவே இருந்து வந்தது. இதற்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள், தலைவரை தேர்ந்தெடுக்க வகை செய்யும் மசோதா, கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், அதன் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.
இந்நிலையில், மாநகராட்சி மேயரை நேரடியாக மக்களை தேர்வு செய்யும் பொருட்டு விதிகளில் மாற்றம் செய்யவதற்கான புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோல் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களையும் மக்களே நேரடியாக தேர்வு செய்வர். இந்த மசோதாவை, அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்தார்..
source: dinasuvadu.com
இதேபோல் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களையும் மக்களே நேரடியாக தேர்வு செய்வர். இந்த மசோதாவை, அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்தார்..
source: dinasuvadu.com