ரயில் எஞ்சின் மீது ஏறி நின்று செல்பி எடுத்த பத்தாம் வகுப்பு இளைஞன் உயிரிழப்பு.
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் செல்போன்களை பார்ப்பது மிகவும் எளிதாக உள்ளது. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடையே செல்போன் மீதான மோகம் அதிகமாக உள்ளது. இந்த செல்போன் பல இளைஞர்களின் வாழ்க்கையில் பல விபரீதமான முடிவுகளை ஏற்படுத்தி விடுகிறது. அதிலும் இன்றைய இளம் தலைமுறைகள் செல்பி எடுப்பதில் தங்களது ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில், ஒரு ரயில் நின்று கொண்டிருந்தது. அதனை பார்த்த பத்தாம் வகுப்பு மாணவன் ஞானேஸ்வரன் என்பவர் அந்த ரயில் என்ஜின் மீது நின்று செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு உள்ளார். தனது ஆசையை நிறைவேற்றுவதற்காக, அவர் அந்த ரயில் என்ஜின் மீது ஏறி செல்பி எடுத்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த உயர் அழுத்த மின் கம்பம் உரசியதால் மாணவர் ஞானேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே வாரியம், இந்த உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக, செல்பி எடுப்பவர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…