இளைஞர்களின் செல்பி மோகம்! ரயில் என்ஜின் மீது ஏறி நின்று செல்பி எடுத்த இளைஞர் பலி!

Default Image

ரயில் எஞ்சின் மீது ஏறி நின்று செல்பி எடுத்த  பத்தாம் வகுப்பு இளைஞன் உயிரிழப்பு. 

இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் செல்போன்களை பார்ப்பது மிகவும் எளிதாக உள்ளது.   இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடையே செல்போன் மீதான மோகம் அதிகமாக உள்ளது. இந்த செல்போன் பல இளைஞர்களின் வாழ்க்கையில் பல விபரீதமான முடிவுகளை ஏற்படுத்தி விடுகிறது. அதிலும் இன்றைய இளம் தலைமுறைகள் செல்பி எடுப்பதில் தங்களது ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில், ஒரு ரயில் நின்று கொண்டிருந்தது. அதனை பார்த்த பத்தாம் வகுப்பு மாணவன் ஞானேஸ்வரன் என்பவர் அந்த ரயில் என்ஜின் மீது நின்று செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு உள்ளார். தனது ஆசையை நிறைவேற்றுவதற்காக, அவர் அந்த ரயில் என்ஜின் மீது ஏறி செல்பி எடுத்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த உயர் அழுத்த மின் கம்பம் உரசியதால் மாணவர் ஞானேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே வாரியம், இந்த உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக,  செல்பி எடுப்பவர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்