பொம்பள நீ? நேரில வந்தேன்.. சுடுகாடு தான்-துணை_கலெக்டர்க்கு மிரட்டல்!என்னனு சொல்றது???

Published by
kavitha

ஆபிஸை சுடுகாடாக்கி விடுவேன் துணை ஆட்சியர்க்கு மிரட்டல் விடுத்த ஊழியரின்  ஆடியோ வாட்ஸ் ஆப்-பில் தீயாக பரவி வருகிறது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர்க்கு வருவாய் ஆய்வாளர் செல்போனில் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகம் இயங்குகிறது.இவ்வலுவலகத்தில் துணை ஆட்சியராக சாந்தி என்பவர் பணியாற்றுகிறார்.

தாலுக அலுவலகங்கள்  ஒவ்வொரு மாதம் 5ந்தேதிக்குள் கணக்கு விவரங்களை எல்லாம் சமர்பிக்க வேண்டும் என்று துணை ஆட்சியர் சாந்தி உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால் 12-ந்தேதி ஆகியும் இலக்கியா என்பவர் மட்டும் கணக்கு குறித்த
விவரங்களை  அளிக்காமல் மெத்தனமாக இருந்து உள்ளார்.மெத்தனமாக இருந்த அப்பெண் ஊழியரை இது குறித்து துணை ஆட்சியர் கண்டித்துள்ளார்.

கண்டித்ததை சேலம் வட்ட வழங்கல் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் அர்த்தனாரியிடம் இலக்கிய இது குறித்து பற்ற வைக்கவே அவர் துணை ஆட்சியரின் செல்போனுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்  செல்போனில் வாயிற்கு வந்தப்படி வசை பாடி திட்டுள்ளார்.

துணை ஆட்சியரை செல்போனில் தொடர்பு கொண்ட அர்த்தனாரி நேரில் வந்தால் அலுவலகத்தை சுடுகாடு ஆக்கி விடுவதாகவும்,நீயும் ஒரு பொம்பளதான? அலுவலகத்தை இழுத்து மூடி சீல் வைத்துவிடுவேன்.அதிகரியா இருந்தா? என்னாலும் பேசுவீயா?  என்று கடுமையான வார்த்தைகளால் வசைப்பாடி மிரட்டல் விடுத்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து 4 நாட்களுக்காக துணை ஆட்சியர்க்கு வந்த மிரட்டலை அடுத்து துணை ஆட்சியர் சாந்தி இது குறித்து உயர் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளார். துணை ஆட்சியரை மிரட்டிய அர்த்தனாரியின் ஆடியோ வாட்ஸ் ஆப்-பில் காட்டுத் தீப்போல் பரவி வருகிறது.

துணை ஆட்சியரையே இவ்வாறு மிரட்டல் விடுக்கின்றனர் என்றால் என்ன சொல்வது என்று மக்கள் முணுமுணுக்கின்றனர்

Recent Posts

“முறைகேடான விதத்தில் பாஜக கூட்டணி வெற்றி”! விளக்கம் கேட்கும் திருமாவளவன்!

“முறைகேடான விதத்தில் பாஜக கூட்டணி வெற்றி”! விளக்கம் கேட்கும் திருமாவளவன்!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…

2 minutes ago

IPL Auction : களைகட்டப் போகும் சவுதி..! இன்று தொடங்கும் ஐபிஎல் ஏலம்..!

சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…

13 minutes ago

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

16 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

16 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

16 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

17 hours ago