பொம்பள நீ? நேரில வந்தேன்.. சுடுகாடு தான்-துணை_கலெக்டர்க்கு மிரட்டல்!என்னனு சொல்றது???
ஆபிஸை சுடுகாடாக்கி விடுவேன் துணை ஆட்சியர்க்கு மிரட்டல் விடுத்த ஊழியரின் ஆடியோ வாட்ஸ் ஆப்-பில் தீயாக பரவி வருகிறது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர்க்கு வருவாய் ஆய்வாளர் செல்போனில் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகம் இயங்குகிறது.இவ்வலுவலகத்தில் துணை ஆட்சியராக சாந்தி என்பவர் பணியாற்றுகிறார்.
தாலுக அலுவலகங்கள் ஒவ்வொரு மாதம் 5ந்தேதிக்குள் கணக்கு விவரங்களை எல்லாம் சமர்பிக்க வேண்டும் என்று துணை ஆட்சியர் சாந்தி உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் 12-ந்தேதி ஆகியும் இலக்கியா என்பவர் மட்டும் கணக்கு குறித்த
விவரங்களை அளிக்காமல் மெத்தனமாக இருந்து உள்ளார்.மெத்தனமாக இருந்த அப்பெண் ஊழியரை இது குறித்து துணை ஆட்சியர் கண்டித்துள்ளார்.
கண்டித்ததை சேலம் வட்ட வழங்கல் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் அர்த்தனாரியிடம் இலக்கிய இது குறித்து பற்ற வைக்கவே அவர் துணை ஆட்சியரின் செல்போனுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன் செல்போனில் வாயிற்கு வந்தப்படி வசை பாடி திட்டுள்ளார்.
துணை ஆட்சியரை செல்போனில் தொடர்பு கொண்ட அர்த்தனாரி நேரில் வந்தால் அலுவலகத்தை சுடுகாடு ஆக்கி விடுவதாகவும்,நீயும் ஒரு பொம்பளதான? அலுவலகத்தை இழுத்து மூடி சீல் வைத்துவிடுவேன்.அதிகரியா இருந்தா? என்னாலும் பேசுவீயா? என்று கடுமையான வார்த்தைகளால் வசைப்பாடி மிரட்டல் விடுத்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து 4 நாட்களுக்காக துணை ஆட்சியர்க்கு வந்த மிரட்டலை அடுத்து துணை ஆட்சியர் சாந்தி இது குறித்து உயர் அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளார். துணை ஆட்சியரை மிரட்டிய அர்த்தனாரியின் ஆடியோ வாட்ஸ் ஆப்-பில் காட்டுத் தீப்போல் பரவி வருகிறது.
துணை ஆட்சியரையே இவ்வாறு மிரட்டல் விடுக்கின்றனர் என்றால் என்ன சொல்வது என்று மக்கள் முணுமுணுக்கின்றனர்