கல்வராயன் மலையில் வெள்ளப்பெருக்கு..!கன நேரத்தில் தப்பிய சுற்றுலா பயணிகள்…!!
கல்வராயன் மலையில் உள்ள அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது இந்த கல்வராயன் மலை இதில் உள்ள அருவியில் எதிர்பாராத விதமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது சுதரித்து கொண்ட சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேறியதால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த ஏராளமானோர் தப்பினர். இந்நிலையி 10 அடி உயரம் கொண்ட இந்த அருவியில் விழும் நீரானது, அடிவாரத்தில் உள்ள முட்டல் ஏரியைச் சென்றடையும்.
சுற்றுலாத் தலமான இங்கு, விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அலைமோதிய நிலையில். குழந்தைகள், பெண்கள் என அனைவரும் உற்சாக குளியல் போட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது கல்வராயன் மலைப்பகுதியில் அரைமணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இதன் காரணமாக அருவியில் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்த நிலையில், திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குளித்துக் கொண்டிருந்த பலரும் உடனடியாகப் பதறி கீழே இறங்கினர்.அங்கிருந்த இளைஞர்கள் பலர் அவர்களை பாதுகாப்பாக அடிவாரத்தை அடைய உதவினர். அடிவாரத்தை அடைந்த பிறகு தான் அவர்கள் சுற்றுலாபயணிகள் நிம்மதியடைந்தனர்.சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
DINASUVADU