கொளுத்தும் வெயிலில்….!!! கோரிக்கையாடு போராட்டம் நடத்தும் மாணவிகள்…!!!
சேலம் நெத்திமேட்டில் அரசின் விலையில்லா மடிக்கணினி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை காவல் உதவி ஆய்வாளர் மிரட்டியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நெத்திமேடு பகுதியில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் ஜெயராணி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் லேப்டாப் வழங்காததை கண்டித்து, +2 முடித்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், மாணவிகளை கைது செய்யப்போவதாகவும், கல்லூரியில் சேர முடியாதவாறு செய்துவிடுவதாகவும் ஒருமையில் பேசினார். இதனால், மாணவிகளுக்கும், காவல் உதவி ஆய்வாளருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், தங்களது பிள்ளைகளை தங்கள் கண்முன்னே ஒருமையில் மிரட்டியதும், தரக்குறைவாக பேசியதும் பெற்றோர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்