அமைச்சர் சேகர்பாபுவுக்கு பாட்ஷா போன்று இன்னொரு முகம் உள்ளது என புகைப்படக் கண்காட்சியை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் பேட்டி.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சார்பில், சென்னை பாரிஸ் கார்னர் பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் முதலமைச்சரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் யோகி பாபு உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அப்போது, அவர்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் உடனிருந்தார்.
புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், என் இனிய நண்பர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் வாழ்க்கை பயணம், அரசியல் பயணம் ஆகிய இரண்டுமே ஒன்று தான். கட்சியில் உழைத்து படிப்படியாக பல பதவிகளை வகித்து தற்போது முதலமைச்சராக இருக்கிறார் என்று சொன்னால், மக்கள் அவர் உழைப்புக்கு அளித்த அங்கீகாரம் என கூறினார். மேலும், அமைச்சர் சேகர் பாபு ரொம்ப விசுவாசமானவர், அன்பானவர், சேகர்பாபுவுக்கு பாட்ஷா போன்று இன்னொரு முகம் உள்ளது எனவும் தெரிவித்தார்.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…