தஞ்சை:எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தியது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சேகர் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சை வடக்கு வீதியில் உள்ள மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக கட்சி நிறுவனருமான எம்ஜிஆர் அவர்களின் இரண்டடியிலான திருவுருவச் சிலை மர்ம நபர்களால் இன்று சேதப்படுத்தப்பட்டிருந்தது.இதற்கு,அதிமுக இணை ஒருங்கிணப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக பிரமுகர்கள்,அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில்,இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து,சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில்,தஞ்சையில் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தியது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்,அவர் மதுபோதையில் சிலையை சேதப்படுத்தியதாக காவல்துறையினர் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து,இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…