பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ
பூர்விக சொத்துக்களையும் திராவிட கழகத்திற்கு தந்தவர் பெரியார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ச்சியாக பெரியார் பற்றி விமர்சனம் செய்து வருகிறார்.
இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள். அந்த வகையில், தற்போது மதிமுக பொதுச்செயலாளர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் ” தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசுபவர்களை பெயர் சொல்லி பேச விரும்பவில்லை. ஆனால், பெரியார் இல்லையேல் நாம் யாரு? இன்று அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகள் பலரும் பெரியாருக்கு கடமைப்பட்டவர்கள். கடைசி கூட்டத்தில் அவர் சொன்னார் ” டெல்லி காரனுக்கு இங்கு என்ன வேலை? உன் மொழி வேறு என் மொழி வேறு உன்னுடைய சாப்பாடு வேறு..என்னுடைய சாப்பிடு வேறு உன்னுடைய கலாச்சாரம் வேறு என்னுடைய கலாச்சாரம் வேறு ரகளை வேண்டாம் மரியாதையாக நீயே ஓடி போயிரு என்று பேசியது தான் பெரியாரின் கடைசி பேச்சு.
தமிழகத்தில் ஆதித்தனார் தஞ்சையிலேயே தமிழ்நாடு பிரிவினை மாநாடு நடத்தியபோது தந்தை பெரியார் அதனை திறந்து வைத்துவிட்டு இனிமேல் ஆதித்தனாருக்கு உறுதுணையாக நான் நிற்பேன் என்று சொன்னார். 6000 திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு ஒன்றை ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள்.
ஆக…தியாகத்திற்கும் பொது வாழ்வில் பொது நலத்திற்கும் பெரியார் வசதி படைத்தவர் தான். அத்தனையும் கட்சிக்கு தான் கொடுத்தார். அவர் பூர்விக சொத்துக்களையும் திராவிட கழகத்திற்கு தான் தந்தார். அப்படி பட்ட பெரியாரை நெஞ்சில் பூசிக்கொண்டு எங்களுக்கு ஈட்டியை எறிவது போல பேச யாரும் துணியவில்லை. இப்போது ஒரு சிலர் பேசுகிறார்கள்.
நாங்கள் இப்போதும் அமைதியாக இருக்கிறோம். ஏனென்றால், எந்த கலவரத்தையும் கூட்டிவிடகூடாது எந்த வன்முறையும் கூடாது என்பதற்க்காக இருக்கிறோம். இப்போது இளைஞர்கள் பலரும் பெரியாரை பற்றி படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரியார் எப்போதும் நிலைத்து வாழ்வார்.நெருப்போடு விளையாடாதீர்கள்” எனவும் வைகோ சற்று காட்டத்துடன் பேசினார்.