பெரியார் குறித்து சீமான் பேச்சு! கடும் கண்டனம் தெரிவித்த வன்னி அரசு!

ஆரிய - பார்ப்பனியத்தின் அடிவருடியாக செயல்படும் சீமானிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

vanni arasu seeman

கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக,  தமிழ் மொழியை குப்பை, காட்டுமிராண்டி மொழி , சனியன் எனக் கூறியவர் பெரியார். தமிழ் தாய்க்கு என்ன கொம்பா இருக்கிறது? மூன்றாயிரம் ஆண்டுகளாக தமிழ்த்தாய் என்ன செய்தது என்று கேட்டவர் பெரியார்.

உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ மகளோ அக்காவோ தங்கையோ அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இரு என பெரியார் கூறியதாகவும்” சீமான் தெரிவித்தது தற்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் பெரியார் அப்படி பேசவில்லை என சீமானுக்கு எதிராக கண்டனங்களும் கிளம்பு தொடங்கிவிட்டது.

அந்த வகையில், சீமானுக்கு விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில் “நாதக தொடங்குவதற்கு முன் தந்தை பெரியார் ஒருவர் தான் புரட்சியாளர் என பேசிய சீமான் கட்சி ஆரம்பித்த பின் அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகிறார். இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியதாகும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாது இந்தியா முழுக்க சமூகநீதி அரசியலின் மீட்பர்களாக இருப்பவர்கள் தந்தை பெரியாரும் புரட்சியாளர் அம்பேத்கரும் ஆவார்கள்.

அதுமட்டுமல்லாது, பார்ப்பனீய- ஆரிய எதிர்ப்பு அரசியலை வரலாற்றுத்தரவுகளோடு நிறுவியவர்களும் இவர்களே. ஆரியத்தை நிறுவ வேண்டுமானால் திராவிட அரசியலை நீர்த்துப்போகச்செய்ய வேண்டும். அதற்கான செயல் திட்டத்தை தமிழ்நாட்டில் பாஜகவும் சங் பரிவார அமைப்புகளும் செயல்படுத்த தொடங்கி விட்டனர். அதனுடைய ஒரு பகுதி தான் சீமானை வைத்து தீவிரமாக்குகிறது.

#RSS கும்பல்.இதன் மூலம் தமிழ்நாட்டில் சமூகப்பதற்றத்தை உருவாக்குவதே சங்பரிவாரக்கும்பலின் சதித்திட்டம். அச்சதிக்கான அசைன்மென்ட் சீமானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், தந்தை பெரியார் குறித்து மிக மோசமாக தூற்றுகிறார். ஆரிய- பார்ப்பனியத்தின் அடிவருடியாக செயல்படும் சீமானிடம் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது” எனவும் காட்டத்துடன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்