“சீமானுக்கு எல்லா வகையான பதிலடியும் தரப்படும்” – தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் எச்சரிக்கை…!

Published by
Edison

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அவதூறாக பேசியதற்காக,சீமானுக்கு தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஆர்.சுதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசுயதாகவும்,அவரைக் கைது செய்ய வலியுறுத்தியும் காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார், போபண்ணா ஆகியோர் நேற்று சென்னையில் டிஜிபியிடம் புகார் அளித்தனர்.

அந்த புகார் மனுவில்,”2019 ஆம் ஆண்டுஆகஸ்ட் 14 ஆம் தேதி  விக்கிரபாண்டி இடைத் தேர்தலின்போது,பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,நாங்கள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். இங்கேதா புதைத்திருக்கிறோம் என்று மார்தட்டி பேசி காவல்துறைக்கு தைரியம் இருந்தால் என் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கட்டும் என்று சொன்னார். அன்றைய தினமே நானும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் சென்னை டிஜிபி அலுவலகம் வந்து அவர் மீது ஒரு புகார் மனுவைக் கொடுத்தோம். ஆனால், அந்த புகார் மனு என்னவானது என்றுகூட எனக்கு பதிலில்லை.

அதே போல, இந்த உள்ளாட்சி தேர்தலிலே தமிழகத்தில் இருக்கிற காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்திக்குக் பிறந்தவர்களா, அல்லது சோனியாக காந்தி பிள்ளைகளா  இவர்கள் எல்லாம் ஏதோ அவருடைய பிள்ளைகள் போல நடந்துகொள்கிறார்கள் என்று அவதூறான வார்த்தையைப் பயன்படுத்தி பேசியிருக்கிறார். இது நாட்டிலே அமைதியைக் குலைக்கும். எனவே,உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில்,நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு,தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஆர்.சுதா கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நாகரீகம் என்பது சிறிதுமில்லாமல் பொது மேடையில் பிதற்றியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.தியாக உருவாம் அன்னை சோனியா காந்தி பற்றி எழுதக் கூசும் வார்த்தைகளை பொதுவெளியில் பேசும் சீமான் அவர்கள் வீட்டுபெண்களையும் இப்படித் தான் பேசுவாரா? அது சரி பாலியல் குற்றச்சாட்டை இன்றளவும் சுமந்து கொண்டிருக்கும் ஒரு குற்றவாளியின் நாக்கு வேறு எப்படி பேசும்.

தமிழ்நாடு தொடங்கி இலங்கை, அமெரிக்கா என ஊர்க்கதையையும் பேசும் சீமானின் நாக்கு என்றைக்காவது அவரது டெல்லி எஜமானர்களை பற்றி பேசியிருக்கிறதா? பாஜகவின் கே.டி.ராகவனுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு என்றவுடன் பதறித் துடித்த அந்த பொய் நாக்குக்கு உத்தர பிரதேசத்தில் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகள் குறித்து தெரியவாவது செய்யுமா அல்லது எதையோ தின்ற மிதப்பில் கண்கள் மறைந்திருக்கிறதா? தப்பு செய்த கே.டி.ராகவனைக் கண்டித்த மக்கள் பிரதிநிதி ஜோதிமணியை விஷம் குடிக்கச் சொன்ன சீமான் அவரது தாயிடமும் மனைவியிடமும் கேட்கட்டும் உண்மையிலேயே யார் விஷம் குடிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்வார்கள்.

பொது வாழ்க்கையில் கணவரைப் பறிகொடுத்து விட்டு இந்தியாவை அச்சுறுத்தும் பாசிஸ்டுகளை எதிர்த்து போரிட தன் சொந்தப் பிள்ளைகளை அனுப்பிய தியாக உள்ளம் கொண்ட வீரத்தாய்அன்னை சோனியா. ஓடாத சில படங்களை இயக்கி விட்டு புலம்பெயர்ந்த தமிழ்மக்களை ஏமாற்றி வாழ்க்கை நடத்தி வரும் சீமான் அன்னை சோனியாவைப் பற்றி பேச தனக்கு தகுதியோ யோக்கியதையோ இருக்கிறதா என்பதை யோசிக்கட்டும்.

கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் மோடியையோ பாஜகவையோகொஞ்சம் கூட விமர்சிக்காமல் எதிர்க்கட்சியான காங்கிரஸ் குறித்து பேசிய போதே உங்கள் நாக்கு யாருக்காக பிதற்றுகிறது என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள், யாகாவாராயினும் நாகாக்க என்ற வள்ளுவரின் வாக்கை நினைவு கொள்ளுங்கள். இன்னொரு முறை எங்கள் தலைவர்கள் குறித்து பேசும் துணிவு உங்கள் நாவுக்கு வரக்கூடாது. அப்படி வருமேயானால் அதற்கு எந்த வகையான பதிலடியையும் கொடுக்க காங்கிரசின் உண்மைத் தொண்டர்கள் தயாராக இருக்கிறோம். எச்சரிக்கை:எல்லா வகையான பதிலடியும் தரப்படும்.”,என்று குறிப்பிட்டுள்ளார்.

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

1 hour ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

3 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

6 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

6 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

7 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

7 hours ago