மக்களவை தேர்தலில் போட்டியிடும் சின்னத்தை வெளியிட்ட சீமான்
- சீமான் விடுத்த கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் “கரும்பு விவசாயி” சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
- 23-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் என கூறினார்.
மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.சீமான் மக்களவை தேர்தலில் விவசாயம் தொடர்பான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை விடுத்தார்.
சீமான் விடுத்த கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் “கரும்பு விவசாயி” சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடந்தது.
சின்னத்தை வெளியிட்ட பிறகு பேசிய சீமான் மக்களவை தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும் எனவும் இந்த தேர்தலில் நமக்கு “கரும்பு விவசாயி” சின்னம் கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.
மேலும் வரும் 23-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் என கூறினார்.