“விஜய் கொள்கையும் எங்கள் கொள்கையும் நேர் எதிரானது” – சீமான்.!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் அக்கட்சியின் கொள்கைகளை இன்று விஜய் அறிவித்துள்ள நிலையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.

TVK Vijay - Seeman

மதுரை : மாநாட்டில் விஜய்யின் பேச்சு ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருந்தது. த.வெ.க கட்சியானது 5 கொள்கை தலைவர்கள் வழியில் அரசியல் அமைக்க உள்ளதாக கட்சித் தலைவர் விஜய் அறிவித்திருக்கிறார்.

இதனிடையே, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை காந்திபுரம் பகுதி மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். அப்பொழுது, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் அக்கட்சியின் கொள்கைகளை இன்று விஜய் அறிவித்துள்ள நிலையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “திராவிடமும், தமிழ்த்தேசியமும் இரு கண்கள் என்கிறார் விஜய். தவெக-வின் கொள்கை, கோட்பாடுகள் எங்களுடன் ஒத்துப்போகவில்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என தம்பி விஜய் கூறியது எங்கள் கொள்கைக்கு நேர் எதிர்மறையானது” எனக் கூறியுள்ளார்.

2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும், பல தொகுதிகளுக்கு இப்போதே வேட்பாளர்களை தேர்வு செய்து விட்டோம். நாங்க அரசியலுக்கு வரும்போது எல்லாம் இவ்வளவு ஆதரவு இல்ல. திரைப்புகழ் இருக்கும்போது அதற்கு ஒரு வீச்சும், ஒரு ரீச்சும் இருக்கு. கடைசி வரைக்கும் தமிழர்கள் நாங்க அனாதைகளாவே இருக்க வேண்டி இருக்கு என கூறிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk maanadu live
TVK Vijay - Seeman
TVK leader Vijay - Director Pa Ranjith
TVK VIjay RS Bharathi
TVK Maanaadu
ThalapathyVijay tvk
tvk title