Seeman: அக்டோபர் 10ம் தேதி சீமான் மீண்டும் ஆஜராக உத்தரவு!

Seeman Et

கடந்த பிப்ரவரி மாதம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திருநகர் காலனி பகுதியில் நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், அருந்ததியர் சமூகத்தினர் குறித்து பேசியது சர்ச்சையானது.

இதனை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவதூறு பேச்சு தொடர்பாக தலித் அமைப்பினர் அளித்த புகாரை அடுத்து, சீமான் மீது வன்கொடுமை சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் கருங்கல் பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சமயத்தில் அவதூறு வழக்கு விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார்.

ஆஜராக சம்மன் வழங்கிய நிலையில் ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் சீமான் விசாரணைக்காக இன்று ஆஜரானார். அப்போது, அவதூறு வழக்கில் ஜாமீன் கோரி சீமான் வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர். ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ததை அடுத்து, சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணையை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தது ஈரோடு மாவட்ட நீதிமன்றம்.

இந்த நிலையில், பிற்பகல் நடைபெற்ற விசாரணையில், அருந்ததிய சமூக மக்களை இழிவு படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்டோபர் 10-ஆம் தேதி மீண்டும் ஆஜராக ஈரோடு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவதூறு வழக்கில் ஜாமீன் கோரி சீமான் இன்று நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அக்டோபர் 10ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்