குடியுரிமை வேண்டுமென்றால் சீமான் இதனை செய்யவேண்டும்! – கைலாஷ் பிரதமர் அலுவலகம் அறிவிப்பு!
- சீமான் அண்மையில் ஒரு பிரச்சார மேடையில் எனக்கு பாஸ்போர்ட் கொடுங்க நான் கைலாஷ் நாட்டிற்கு சென்றுவிடுகிறேன் என கூறியிருந்தார்.
- இதற்கு பதிலளிக்கும் விதமாக ஸ்ரீ கைலாஷ் பிரதமர் அலுவலகம் என கூறப்படும் டிவிட்டர் கணக்கில் இருந்து சீமானுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் ஒரு பிரச்சாரத்தின் போது, ‘தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் குடியுரிமை மறுக்கப்பட்டால் ஒரு கவலையும் இல்லை , என் பாஸ்போர்ட்டை கொடுங்கள் நான் கைலாஷ் நாட்டிற்கு சென்றுவிடுவேன்,’ என நகைச்சுவையாக கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, PMO Kailas எனும் டிவிட்டர் பக்கத்தில் இருந்து, ‘ பிரிவினைவாதிகளை அனுமதிக்க ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல. அரசியலை விட்டுவிட்டு திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சி அம்மனின் பாதம் தொட்டு வணங்கினால் குடியுரிமை வழங்க தயார்! இப்படிக்கு பிரதமர் அலுவலகம், கைலாஷ்.’ என பதியப்பட்டுள்ளது.