திமுக எம்பி ஆ.ராசா கூறிய கருத்துக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்த உள்ளது குறித்து கருத்து தெரிவித்த சீமான் கூறுகையில், ‘மனு தர்மம் சனாதன கொள்கை எழுதியவர்களை விட்டுவிட்டு, அந்த கருத்தை எடுத்து சொன்னவர்களை திட்டுது தவறு.’ என குறிப்பிட்டுள்ளார்.
மனு ஸ்மிருதி பற்றி திமுக எம்பி ஆ.ராசா கூறிய கருத்துக்கள், இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியது. இதனால் வரும் 26ஆம் தேதி சிறை நிரப்பு போராட்டம் நடத்த தமிழக பாஜக முடிவு எடுத்துள்ளது.
இது குறித்து இன்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறுகையில், ‘ இது தேவையற்ற விமர்சனம். மனு தர்மம் சனாதன கொள்கை எழுதியவர்களை விட்டுவிட்டு, அந்த கருத்தை எடுத்து சொன்னவர்களை திட்டுது தவறு.
உழவன் விவசாயம் செய்வார்கள். வண்ணன் துணி துவைப்பவர்கள். இவர் ஐயர் நல்லவர்கள் படிப்பார்கள் என நானே பாடப்புத்தகத்தில் படித்துள்ளேன். இந்த கருமம் தான் சனாதனத்தில் இருக்கிறது.
நீங்க போராட வேண்டியது உங்க மனுதர்ம கொள்கையினை எதிர்த்து தான் போராடனும். இதனை பெரியார் அதிகம் பேசிவிட்டார். அதைத்தான் அண்ணன் ஆ.ராசா அவர்களும் பேசியுள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு கொண்டு வரும் நீங்கள் ஒரே சுடுகாடு , ஒரே குளம் கொண்டுவாங்க பாக்கலாம். ‘ என சீமான் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…