WorldCup2023 : கப்பு முக்கியம் பிகிலு.! சீமான் கலக்கல் பதில்.!

NTK Leader Seeman says about WorldCup2023

கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த உலக கோப்பை தொடர் இன்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மோத உள்ளன. இந்த போட்டியை காண பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வரவுள்ளனர்.

இந்த நாளுக்காக இரண்டரை ஆண்டு காலமாக தயாராகி வந்தோம் -ரோஹித் ஷர்மா..!

சுதந்திர போராட்ட தியாகி வ.வு.சியின் நினைவு தினமான நேற்று அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரும் உலகக்கோப்பை பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.

உடனே கப்பு முக்கியம் பிகிலு என விஜய் பட வசனத்தை சீமான் கூறவே அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். அதன் பிறகு, எனக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தமில்லை. நானும் முன்னர் கிரிக்கெட் பார்த்தேன். எப்போது வீரர்களை கோடி கோடியாய் ஏலம் எடுக்க ஆரம்பித்தானோரோ அப்போது அது ஆன்லைன் ரம்மி போல ஒரு சூதாட்டமாகி விட்டது என சீமான் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்