மீண்டும் ஆத்ரவு… வெள்ளத்தில் களமிறங்கா விஜயை பாராட்டிய சீமான்!

பனையூர் அலுவலகத்தில் வைத்து தவெக தலைவர் விஜய் நிவாரணம் வழங்கிய விவகாரத்தில் விஜயின் செயலுக்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

vijay seeman

திருப்பூர்: பெஞ்சள் புயலால் வட தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை டிபி சத்திரம் மக்களுக்கு தவெக தலைவர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். தனது பனையூர் அலுவலகத்துக்கு மக்களை வரவழைத்து, இந்த உதவிகளை அவர் செய்தார்.

சுமார் 350 குடும்பங்களை நேரில் வரவழைத்து அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கியதோடு, விஜய் அவர்களுடன் கலந்துரையாடி, குறைகளையும் கேட்டறிந்தார். ஆனால், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை தனது இருப்பிடம் வரவழைத்து விஜய் நிவாரண உதவி வழங்கியது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

அதாவது, மழை வெள்ளத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கி பணியாற்ற, விஜய் எங்கு சென்றார் எனக் கேள்வி எழுந்தது. பாதிக்கப்பட்டவர்களை களத்தில் சந்திக்காமல், அவர்கள் துயரை எவ்வாறு உணர முடியும், இது என்ன வகையான அரசியல் அணுகுமுறை என்று அரசியல் விமர்சகர்கள் சாடினர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கிய விஜய், “தான் நேரில் வந்து உதவி செய்யாதது குறித்து அவரே விளக்கமளித்தார். பயனாளிகளின் வீட்டிற்கு தான் வந்திருந்தால், இவ்வாறு அமர்ந்து பேசியிருக்க முடியாது” என விஜய் தெரிவித்ததாக நிவாரணம் பெற்றவர்கள் கூறினர்.

இவ்வாறு, பலர் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னரும், வந்த பிறகும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வந்த சீமான், தவெக மாநாட்டுக்கு பின், எதிர்மறையான கருத்துக்ளை பதிவு செய்து வந்தார்.

இந்த சூழலில், இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்றால் கூட்டம் அதிகமாக கூடும், விஜய் கொடுக்க வேண்டும் என நினைப்பதே பெரிய விஷயம் தான்.  கூட்டம் கூடி பிரச்சனை ஏற்பட்டால் அதற்கும் விமர்சனம் செய்வீர்கள், நிவாரணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை பாராட்ட வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்