100 நாள் வேலைத்திட்டத்தால் திமுகவில் இருந்த விலகிய சுப்புலட்சுமி.? கடிதம் எழுதிய சீமான்.!
திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் இருந்து விலகியது குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த மூத்த தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அண்மையில் திமுகவில் இருந்து விலகிவிட்டார். வெகு நாட்கள் முக்கிய பொறுப்பில் இருந்த சுப்புலட்சுமியின் விலகல் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது.
தற்போது சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் ஒன்றை எழுதி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ;எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு என தொடங்கி பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
அதில் குறிப்பிடுகையில், ‘ சிறு வயதில் இருந்தே உங்களை அறிந்துள்ளேன். உங்க்ளை அம்மா என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன். அந்த காலத்தில் உங்கள் அருமை எனக்கு தெரியவில்லை. தற்போது தான் உங்கள் கொள்கை உறுதி எனக்கு தெரிகிறது. உங்களை இழந்ததற்கு திமுக தான் வருந்தி திருந்த வேண்டும்.’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘ 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ள பாதகங்களை நீங்கள் தலைமைக்கு எடுத்துரைத்த பின்னர் எழுந்த அழுத்தங்கள் காரணமாக தான் நீங்கள் விலகினீர்கள் என கேள்விப்பட்டேன். அந்த கருத்தோடு நான் ஒத்துப்போவேன். அந்த திட்டம் தமிழினத்தை அழிவு பாதைக்கு அழைத்து சென்றுவிடும்.’ என அந்த கடிதத்தில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு,https://t.co/AdTHW5Y0Fc pic.twitter.com/FkekaTokWw
— சீமான் (@SeemanOfficial) October 6, 2022