இந்தியா எங்கள் நாடும் இல்லை.. நாங்கள் இந்தியரும் இல்லை.. சீமான் இந்திய ஒருமைப்பாட்டை உடைக்கும் பேச்சு…
- இந்தியா எங்கள் நாடு இல்லை, சென்னையில் தடாலடி .
- சீமானின் சர்ச்சை கருத்து.
பாரத மாதா கீ ஜே என்பவர்களே இந்தியாவில் வாழ முடியும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இது தொடர்பாக சீமானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில், நாங்கள் பாரத மாதாவின் பிள்ளைகள் அல்ல. தமிழ்த் தாயின் பிள்ளைகள் நாங்கள். எங்களால் பாரத் மாதா கீ ஜே என சொல்ல மாட்டோம், தமிழ்த்தாய் வாழ்க என்றே கூறுவோம். இந்தியாவில் பிரதேசங்களுக்கு முக்கியம் தரவில்லை என்றால் இந்தியா என்ற வலிமையான நாடு உருவாகாது அது உள்நாட்டு போரால் சிதறுண்டு போகும் என்று அம்பேத்கார் குறிப்பிட்டுள்ளார் என்றும், இந்த நிலம் இந்திய நாடாவதற்கு முன்பாகவே பன்னெடுங்காலமாக வாழ்கிறவர்கள் நாங்கள். இந்தியா எங்களது தேசமும் அல்ல. எங்களது தேசம் தமிழ்தேசம். இந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் பேச்சு இந்திய ஒருமைப்பாட்டிற்க்கு ஊறு விளைவிக்கும் விதமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.