பாஜகவுடன் சேர்ந்து இருந்தால் 500 கோடி கிடைச்சிருக்கும்.! சீமான் பரபரப்பு.!
Seeman : பாஜகவுடன் கூட்டணி வைத்தால் 500 கோடி ரூபாய் கிடைத்து இருக்கும் என சீமான் நேற்று பேசியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் . தங்கள் தரப்பு வாக்குறுதிகளை கூறுவதோடு, மற்ற கட்சிகள் குறித்த விமர்சனங்களையும் முன்வைத்து பிரச்சாரம் செய்ய எந்த அரசியல் தலைவரும் தவறவில்லை. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பாஜக குறித்து நேற்று ஓர் பரபரப்பான தகவலை தெரிவித்தார்.
தேனி மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் குமார் என்பவரை ஆதரித்து அக்கட்சி தலைவர் சீமான் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன் குறித்து பேசுகையில், சசிகலாவை முதலைமைச்சர் பதவிக்கு ஏற்காமல் 22 நாட்கள் தள்ளிப்போட்டு சிறையில் அடைத்தது யார்.? இதையெல்லாம் மறந்து தான் டிடிவி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், அவருக்கு குக்கர் சின்னம் கிடைத்தது. என்னையும் அழைத்தாளார்கள். நான் கூட்டணி சேரவில்லை. சேர்ந்து இருந்தால் 500 கோடி கிடைத்து இருக்கும். 10 மக்களவை சீட் கிடைத்து இருக்கும். கேட்ட சின்னம் கிடைத்து இருக்கும். கூட்டணி சேரவில்லை தேர்தல் ஆணையம் கேட்ட சின்னத்தை கொடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் பாஜக அலுவலகம் போல தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறது என கடுமையாக விமர்சனம் செய்தார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.