நீட் தேர்வு முக்கியம் என்றால் நீட்டிற்கு முன்னாடி பயின்ற மருத்துவர்கள் சரியில்லையா.? ஐயா மோடிக்கு உடம்பு சரி இல்லைனா யாருகிட்ட மருத்துவம் பார்ப்பார்கள்? – சீமான் கருத்து.
இன்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, நீட் தேர்வு, ஆ.ராசாவின் மனு தர்மம் பற்றிய கருத்துகள் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறினார்.
மனுதர்மத்தில் சூத்திரர்கள் பற்றி எம்.பி ஆ.ராசா பேசுகையில், நாமெல்லாம் விபசாரி மகன் என்று மனு தர்மத்தில் குறிப்பிடபட்டுள்ளது என பேசியிருப்பார். இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக அமைந்தது.
இதுகுறித்து சீமான் பேசுகையில் , ‘மனுதர்மத்தில் எழுதி வைத்துள்ளதை தான் ஆ.ராசா பேசியுள்ளார். அவராக ஒன்றும் பேசவில்லை. எழுதி வைத்து இருந்ததை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். மனு தர்மத்தின் அடிப்படையில் தான் இங்கு எல்லாம் நடக்கிறது. ஒரே நாடு ஒரே தேசம் ஒரே வரி அரசியல் சாசனத்தில் இருக்கிறதா.? ஜெய் ஸ்ரீராம் அரசியல் சாசனத்தில் இருக்கிறதா? என தனது கருத்தை கூறினார்.
மேலும், நீட் தேர்வு முக்கியம் என்றால் நீட்டிற்கு முன்னாடி பயின்ற மருத்துவர்கள் சரியில்லையா.? ஐயா மோடிக்கு உடம்பு சரி இல்லைனா யாருகிட்ட மருத்துவம் பார்ப்பார்கள்? நீட் பயின்ற மாணவர்களிடமா.? அல்லது பழைய மருத்துவர்களிடமா.? ‘ என தனது கருத்தை தெரிவித்தார் நாம் தமிழ்ர் கட்சி தலைவர் சீமான்.
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…
டெல்லி : நேற்று உச்சநீதிமன்ற தலைமை வளாகத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தை (NJMA) தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.…