ஐ யம் வெயிட்டிங்.. விஜயுடன் கூட்டணியா.? சீமான் கலக்கல் பதில்.!

Published by
பால முருகன்

சென்னை : 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு ‘i am waiting’  என சீமான் பதில் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். தற்போது கோட் படத்தில் நடித்து முடித்த பிறகு மீண்டும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அடுத்ததாக சினிமாவை விட்டு அரசியல் பயணத்தில் முழுவதுமாக ஈடுபடஉள்ளார். மேலும், வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ள சட்டமன்ற தேர்தலில்  போட்டியிடவுள்ளார்.

இந்நிலையில், விஜய் அரசியல் வருகை குறித்தும், அவருடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்வியும் பல அரசியல் தலைவர்களிடம்  கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் “2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா? என்ற கேள்வியை கேட்டனர்.

அந்த கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ” இந்த கேள்விக்கு என்னுடைய தம்பி சொல்வதை போல நான் சொல்லவேண்டும் என்றால் ‘i am waiting’ (காத்திருக்கிறேன்). தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடக்கும் மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு வந்தால் கண்டிப்பாக நான் அங்கு செல்வேன்”என சீமான் கூறினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் ” நீங்களும், விஜய்யும் இரகசியமா சந்தித்ததாக செய்திகள் வெளியாகிறது இது உண்மையா? என்று கேட்டனர். அந்த கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதில் கூறிய சீமான் ” இரகசியமா சந்திக்க நாங்கள் இருவரும்  என்ன கள்ளக்காதலர்களா? நான் அண்ணன் அவர் என்னுடைய  தம்பி. அண்ணன் தம்பி சாதாரணமாக சந்திப்பதை போல நாங்கள் இருவரும் சந்தித்துக்கொள்வோம் அவ்வளவு தான்” எனவும் பதில் அளித்தார்.

Published by
பால முருகன்

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

2 hours ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

3 hours ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

3 hours ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

12 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

14 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

15 hours ago