தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளுக்கு திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பின்னர் இறுதியாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அதிமுக கூட்டணி விட திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதாக அறிவித்தது.
ஆனால் நாம் தமிழர் கட்சி பொறுத்தவரை ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் ஒரு இடங்களை மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில் ,
2021-ல் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் பெரிய மாற்றம் வரும். இந்த மாதம் இறுதிக்குள் 2021-ல் போட்டியிடுகிற வேட்பாளர்களை தேர்வு செய்து களப்பணிக்கு அனுப்பி தொடர்ச்சியாக ஒன்றரை ஆண்டு காலம் வேலை செய்கிற வாய்ப்பை அளிப்போம்.
117 பெண்கள், 117 ஆண்கள் என்று 234 இடங்களில் சரிசமமாக பெண்கள் போட்டியிட வாய்ப்பு அளிக்க உள்ளோம் என கூறினார்.அப்போது இந்த உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் பின்னடைவு சந்தித்து உள்ளீர்களா ..? என கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு சீமான் பாராளுமன்ற தேர்தலை விட எவ்வளவு வாக்கு வாங்கி முன்னேறி இருக்கிறோம் என்று தான் பார்க்க வேண்டும்.
பொதுவாக உள்ளாட்சி தேர்தலில் சாதி மற்றும் பணம் அதிகமாக வேலை செய்யும் அனைத்தையும் தாண்டி நாங்கள் எவ்வளவு விழுக்காடு வாக்கு வாங்கி உள்ளோம் என பார்க்கவேண்டும்.எங்களின் வாக்கு சதவிகிதம் 4% இருந்தது 10% வாக்குகளை முன்னேறி உள்ளோம் என கூறினார்.
மேலும் 120 பஞ்சாயத்து தலைவர் வென்றுள்ளனர். வார்டு உறுப்பினர்கள் என பல இடங்களில் வென்று உள்ளோம். அதை பற்றி யாரும் பேசுவது இல்லை. ஒன்றிய உறுப்பினராக குமரியில் சுனில் வென்றுள்ளார் என கூறினார்.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…