நாளை முதல் தேர்தல் பரப்புரை.. “மைக்” சின்னத்தில் போட்டி… சீமான் அறிவிப்பு!

seeman

Seeman: மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி பைக் சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் செயல்பட்டு வருகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், தமிழகத்தில் ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு சின்னம் பெரிய தலைவலியாக அமைந்துள்ளது.

அந்தவகையில், இத்தனை வருடங்களாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்த சீமானின் நாம் தமிழர் கட்சிகளுக்கு, அந்த ஒதுக்கப்படவில்லை, வேறொரு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சீமான், சின்னம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டார்.

இருப்பினும், கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக நாம் தமிழர் கட்சிக்கு பைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. இருந்தாலும், வேறு சின்னம் கேட்டு சீமான் முறையிட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், வரும் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி பைக் சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற சீமான் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பைக் சின்னத்தை வெளியிட்டார். இதன்பின் அவர் கூறியதாவது, நாம் தமிழர் மைக் (ஒலிவாங்கி) சின்னத்தில் போட்டியிடும்.  சீமானுக்குத்தான் ஓட்டு, சின்னத்துக்கு இல்லை. கரும்பு விவசாயி சின்னத்துக்காகக் கடைசி வரை போராடினோம்.

சின்னத்தில் தான் விவசாயியா சீமான்..? நான் உண்மையில் விவசாயிதான். பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் டிடிவிக்கு குக்கர் சின்னமும், ஜிகே வாசனுக்கு சைக்கிள் சின்னமும் கிடைத்தது. ஆனால் என் வாழ்நாளில் அந்த சமரசத்துக்கு இடமில்லை, யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என்றும் நாளை முதல் தேர்தல் பரப்புரை தொடங்க உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

மேலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை சுயேட்சையாக நிறுத்தி 40 தொகுதிக்கும், 40 சின்னம் கொடுக்க வேண்டும் என்பது அவர்களது முயற்சி என்றும் இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும் களத்தில் நிற்பதற்கு காரணம் நீங்கள் என்னை கைவிட மாட்டீர்கள் என்று தான் எனவும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்