ஊரடங்கு போது குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் பார்த்தால் நடவடிக்கை.!
குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து, பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. இதனால் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் பதிவிறக்கம் செய்து பரப்புவதாக ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து, பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆபாசப் படங்களை பார்ப்பதும், குடும்ப வன்முறையில் ஈடுபடுவதும் குற்றம். இதில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, குழந்தைகள் ஆபாசப் படங்களை பார்க்க வேண்டாம் என அறிவுறுத்துகிறோம். இந்த சமயத்தில் அரசு கூறும் அனைத்து ஆலோசனைகளையும் கேட்டு அமைதியாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.