பாஜக, பாமக, தேமுதிகவுடன் ரகசிய கூட்டணி!!அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பகீர் தகவல்

Default Image

பாஜக, பாமக, தேமுதிகவுடன் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சு அதிகரித்து வருகிறது.

பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில், தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது.இன்னும் ஒரு சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.

Image result for அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் 

இந்நிலையில்  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், பாஜக,பாமக, தேமுதிகவுடன் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.விரைவில் மக்களவை தேர்தலுக்கான அதிமுக கூட்டணி பற்றி அறிவிப்பு வரும் என்று  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்