நாளை தமிழகம்-கேரளா இடையேயான நதிநீர் பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
தமிழகம் மற்றும் கேரளா இடையிலான நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன் தலைமையில் ஒரு குழுவும், கேரள அரசு சார்பில் அம்மாநில நீர்வள ஆதார துறை செயலாளர் தலைமையில் மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற இந்த குழுவின் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தற்பொழுது இரண்டாம் கட்டமாக நாளை கேரளாவில் தமிழக குழு பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. நாளைய பேச்சுவார்த்தையில் ஆனைமலையாறு நல்லாறு அணைத் திட்டம் பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தில் நீர் பங்கீடு கோவை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய சிறுவாணி அணை பிரச்னை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத்: ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா…
சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால்…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டத்தில் நடிகை 'சன்னி லியோன்' பெயரில் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு மாதந்தோறும் பணம்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரே…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் குவைத் நாட்டின் அழைப்பை ஏற்று அங்கு 2 நாள் சுற்றுப்பயணம்…
வேலூர் : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், கடந்த அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை…