விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி வரை 25.90% வாக்குகள் பதிவு என தேர்தல் ஆணையம் தகவல்.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 6ம் தேதி முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது 77.43% வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து, இன்று 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 25.90% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் -25.28%, செங்கல்பட்டு -26.07%, கள்ளக்குறிச்சி -29.10%, வேலூர் -24.23%, ராணிப்பேட்டை -22.19%, திருப்பத்தூர் -12.13%, நெல்லை – 22.89%, தென்காசி 26.67% மற்றும் அதிகபட்சமாக விழுப்புரத்தில் -32.41% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…