#BREAKING: மநீம சார்பில் இரண்டாம் கட்ட வேட்பாளர் வெளியானது..!

மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் -6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதைத் தொடர்ந்து, இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியல், மற்றும் தொகுதி பங்கீடு வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. ஏற்கனவே முதற் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், இன்று 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலில் நம் கட்சியின் சார்பாக போட்டியிடும் இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலை தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் வெளியிடுகிறார். தற்போது நேரலையில். #நம்மசின்னம்டார்ச்_லைட் #தமிழகம்விற்பனைக்குஅல்ல #சீரமைப்போம்_தமிழகத்தை https://t.co/7WT1JC5fXW
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 12, 2021
தி.நகர் – பழ.கருப்பையா
எடப்பாடி தொகுதி – தாசப்பராஜ்
வேளச்சேரி – சந்தோஷ் பாபு ஐஏஎஸ்
மயிலாப்பூர் – ஸ்ரீபிரியா
ஆலந்தூர் – சரத்பாபு
சிங்காநல்லூர் – மகேந்திரன் ஆகியோர் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுகின்றனர்.