அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான் தான்.! சபாநாயகருக்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம்.!
ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் தொடர்ந்து ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தனர். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.