திருநங்கைகளுக்கு இரண்டாம் தவணை இரண்டாயிரம் ரூபாய் – அரசாணை வெளியீடு!
திருநங்கைகளுக்கு இரண்டாம் தவணை இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஏற்கனவே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட நான்காயிரம் ரூபாய் நிவாரணத் தொகை இரண்டு தவணையாக வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவருக்கும் நிவாரண தொகையாக 2000 ரூபாய் ஏற்கனவே முதல் தவணையில் வழங்கப்பட்டிருந்த நிலையில் இவர்களுக்கான இரண்டாம் தவணை 2000 ரூபாய் நிவாரணம் வழங்குவதற்கு தற்போது தமிழக அரசு ஒரு கோடியே 72 லட்சம் ரூபாயை ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
மேலும் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகள் வாரியத்தில் பதிவு செய்திருந்த 8,493 பேருக்கும் தலா 2000 ரூபாய் நிவாரணத் தொகை முதல் தவணையில் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதும் இரண்டாம் தவணையாக வழங்கப்படக்கூடிய இந்து 2000 ரூபாய்க்கு திருநங்கைகள் வாரியத்தில் பதிவு செய்த 8,591 திருநங்கைகளுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் இரண்டாம் தவணையாக வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.