சீர்மிகு காவலர் தேர்விலும் முறைகேடு… நியமனத்திற்க்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு…

தமிழ்நாடு சீர்மிகு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை காப்பாளர்கள், தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 8,888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணையை வெளியிட்டது. அதன் அடிப்படையில், எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு என தொடர்ச்சியாக பணிகள் நடத்தப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி, தற்காலிக தேர்வுப் பட்டியலை வெளியிடப்பட்டது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வானவர்கள் எனக் கூறி, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி திருவண்ணாமலையை சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே ‘’டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டு விசாரணை நடந்து வருகிறது. எனவே, காவலர் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதால், தேர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும், வரும் மார்ச் மாதம் 5ஆம் தேதிக்குள் தமிழக அரசு, டிஜிபி, தேர்வு வாரிய உறுப்பினர்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழகத்தில், புதிய புயழை கிழப்பியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025