இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய கல்வித்துறை உத்தரவு.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலத்திற்கு மேலாக பள்ளிகளில் நேரடியாக வகுப்புகளை நடத்த முடியாத சூழ்நிலை இருந்த நிலையில், பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு முன்னதாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன. 19 முதல் 27ம் தேதி வரையிலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன. 19 முதல் 28ம் தேதி வரையிலும் திருப்புதல் தேர்வு நடைபெற்றது.
மேலும், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு வருகிற 28-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. முதற்கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் கசிவு ஆன விவகாரம் போல், மீண்டும் எந்த சம்பவமும் நடந்துவிடக் கூடாது என்பதில் பள்ளிக்கல்வித்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், 10, 12ம் வகுப்புகளுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்கட்ட திருப்புதல் தேர்வுகளில் குளறுபடிகள் ஏற்பட்டதன் காரணமாக முதன்மை கல்வி அலுவலர்கள் ஆணையிட்டுள்ளனர்.
ஏதேனும் ஒன்று லீக் ஆனாலும், மற்றொன்றைக் கொண்டு தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள 10, 12-ம் வகுப்பு 2-ம் கட்ட திருப்புதல் தேர்வுக்கு 2 வகையான வினாத்தாள்களை தேர்வுத்துறை பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…