தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி, பதில் நேரத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் மரபை மாற்ற வேண்டாம். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, 10 முறை கடிதம் அளித்துள்ளோம்.
3 சட்டமன்ற உறுப்பினர்களை நீக்க சொன்னதையும் நீங்கள் செய்யவில்லை. அதாவது, ஓபிஎஸ் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக, சட்டம் விதி என்ன சொல்கிறதோ அதன் படி தான் நடக்கிறேன். நீங்கள் கொடுத்ததை மறுக்கவில்லை, இருக்கை விவகாரம் தொடர்பாக வீம்புக்காக நடக்கவில்லை, சட்டப்படி தான் நடக்கிறேன்.
சட்டமன்றத்திற்குள் இருக்கை குறித்து கேள்வி எழுப்ப உரிமை இல்லை. இருக்கைகள் ஒதுக்குவது எனது தனிப்பட்ட உரிமை என்றும் ஒருவர் எந்த சின்னத்தில் வென்று பேரவைக்குள் வருகிறாரோ அதே சின்னத்தில் தான் கடைசி வரை பார்ப்பேன் எனவும் இருக்கை ஒதுக்கீடு குறித்து 10 முறை கடிதம் அளித்துள்ளதாக இபிஎஸ் பேசியதற்கு சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்தார். எதிர்க்கட்சித் தலைவர் பேசி வரும்பொழுது ஓபிஎஸ் மற்றும் அவர் ஆதவாளர்கள் பேச முற்படுவதால் சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதனால் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன்பின், எதிர்க்கட்சியினரை வெளியே அனுப்பும்படி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சபாநாயகர் உத்தரவை தொடர்ந்து எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் அப்பாவு பதிலில் திருப்தி இல்லை என கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஓபிஎஸ்க்கு பதில் ஆர்பி உதயகுமாருக்கு வழங்க அதிமுக கோரிக்கை வைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…