தமிழகத்தில் இன்று முதல் தொடர் விடுமுறை -தேர்வுகள் ஒத்திவைப்பு
- ஊரக உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- மேலும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வருகின்ற 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினம் மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது.தற்போது தமிழகத்தில் பல இடங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
இதனால் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் வெளியிட்ட உத்தரவில், ஊரக உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் நாளை முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கல்லூரிகள், பல்கலைக்கழங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.ஜனவரி 2-ஆம் தேதி முதல் தான் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக இன்று முதல் ஜனவரி 1-ஆம் தேதிவரை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் வரும் 27 மற்றும் 30ம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள், ஜனவரி 3, 4-ம் தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று பல்கலைகழக பதிவாளர் தெரிவித்த்துள்ளார்.