சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் , தேனி குரங்கணி தீ விபத்து சம்பவம் தொடர்பாக, பாலவாக்கத்தில் உள்ள சென்னை ட்ரெக்கிங் கிளப் அலுவலகத்தில், ஆய்வு மேற்கொண்டார்.
தேனி குரங்கணி மலைக்கு, ஈரோடு மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள், இரு பிரிவாக பயணித்துள்ளனர். இவர்களில் சென்னையிலிருந்து 27 பேரை, பாலவாக்கத்தில் உள்ள சென்னை ட்ரெக்கிங் கிளப் நிறுவனம் அழைத்துச் சென்றது.
குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், சென்னை ட்ரெக்கிங் கிளப் நிறுவனத்தின் உரிமையாளர் பீட்டர் மற்றும் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் தப்பியோடி விட்டனர். மேலும், நிறுவனத்தின் பெயர் பலகையும் அகற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் ஏழுமலை, நிறுவனம் அமைந்துள்ள கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஊழியர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த வட்டாட்சியர், பின்னர் அங்கிருந்து சென்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…