ஏ.ஆர்.ரகுமானுக்கு அரசியல்ரீதியாக நெருக்கடி கொடுக்க நேரிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – சீமான் எச்சரிக்கை
சகோதரர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அரசியல்ரீதியாக நெருக்கடி கொடுக்கவோ, மதரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுக்கவோ முற்பட்டால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சீமான் எச்சரிக்கை.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, ஹிந்தி மொழியை ஆங்கில மொழிக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டுமெனவும், இந்தி தான் இந்தியாவின் இணைப்பு மொழி என தெரிவித்திருந்தார். இது பேசும் பொருளான நிலையில், இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழே இந்தியாவின் இணைப்பு மொழி என்று பதில் அளித்திருந்தார்.
ஏ.ஆர்.ரகுமானின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தித்திணிப்புக்கெதிரானக் கருத்தைக் கூறியதால் சகோதரர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அரசியல்ரீதியாக நெருக்கடி கொடுக்கவோ, மதரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுக்கவோ முற்பட்டால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.’ என தெரிவித்துள்ளார்.
இந்தித்திணிப்புக்கெதிரானக் கருத்தைக் கூறியதால் சகோதரர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அரசியல்ரீதியாக நெருக்கடி கொடுக்கவோ, மதரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுக்கவோ முற்பட்டால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!https://t.co/jwZUJGaamZ pic.twitter.com/fyOoZaMas8
— சீமான் (@SeemanOfficial) April 13, 2022