இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்வீட்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் கூறுகையில், சாதாரணக் காய்ச்சல் தான் என்றும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கூறினார்.
இதற்கிடையில், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்லகண்ணுவிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அந்த பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், இம்மண்ணின் அரசியல் அறத்திற்கு நிகழ்காலச் சான்றாகவும் எளிமையின் வடிவாகவும் திகழும் பெருந்தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு உடல்நலம் தேறி வருகிறார் என்ற செய்தி ஆறுதலைத் தருகிறது. ஐயா விரைந்து முழுமையான நலம்பெற விழைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…