Seeman: சசிகலாவை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? என டிடிவி தினகரனுக்கு சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தேனியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் மதன் ஜெயபாலனுக்கு ஆதரவாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது சீமான் கூறியதாவது, சசிகலாவை நான்கரை ஆண்டுகள் சிறையில் வைத்தவர்கள் யார்? என கேள்வி உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா என்றார். சசிகலா பதவியேற்பதை தடுக்க 22 நாட்கள் தாமதப்படுத்தியது, சசிகலா வழக்கை அவசர அவசரமாக விசாரித்து தண்டனை வழங்கியது யார்?.
சசிகலா குடும்பம், கட்சி, ஆட்சி இருக்கக்கூடாது, அதை தவிர வேறொருவர் கையில் கொடுக்கும் திட்டத்தை வகுத்தது யார் என சரமாரியாக கேள்வி எழுப்பிய சீமான், இதற்கு மனசாட்சியுடன் மக்கள் முன்பு டிடிவி தினகரன் பதில் சொல்ல வேண்டும் என கூறினார். சசிகலா குடும்பத்தில் நிகழ்ந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் பாஜக தான் காரணம்.
டிடிவி தினகரன், சசிகலா பிரச்சினையில் இருந்த போது தமிழகத்தில் குரல் கொடுத்த ஒரே ஆள் நான். இரட்டை இலை சின்ன வழக்கில் கைதானவர் இன்னும் சிறையில் இருக்கிறார். இரட்டை இலையை பறித்து எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்தது பிரதமர் மோடி தான். என்னை மிரட்டி பார்த்தார்கள், நான் சமரசம் ஆகவில்லை, சரணடையவில்லை என சீமான் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சீமான், முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று விவசாயி சின்னத்தை முடக்கி விட்டார்கள், தற்போது அமமுகவுக்கு குக்கர் சின்னம் எப்படி வந்தது. இவ்வளவு நிகழ்ந்தும் டிடிவி தினகரன் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார் எனவும் விமர்சத்தார். இதனிடையே, தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயாலளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…