சென்னையில் பிரபல ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், பலரும் தங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாது, தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை மேற்கொள்கின்றனர். அந்த வகையில், சென்னை வடபழனியில் உள்ள பிரபல ஸ்கேன் செண்டரில், 128 பேர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இதில் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக போலியான முடிவுகள் தரப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த ஸ்கேன் செண்டருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து, அனைத்து ஸ்கேன் செண்டர்களிலும் சோதனை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…