சென்னையில் 350 கடைகளுக்கு சீல் வைப்பு – மாநகராட்சி அதிரடி
சென்னையில் 15 மண்டலங்களில் ஊரடங்கு தொடங்கி தற்போது வரை 350 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேரக் கட்டுப்பாட்டை பின்பற்றாமல் இருந்த 350 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் 15 மண்டலங்களில் ஊரடங்கு தொடங்கி தற்போது வரை 350 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நேரக் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருந்ததால் சீல் வைக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும் சீல் வைக்கப்பட்டுள்ள கடைகளை திறக்க 3 மாதங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சென்னையில் 98% எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் கடந்த ஒரு வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளார். சென்னையில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 767 பேர் ஆகவும், அதில் 215 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதனிடையே, பேரூராட்சி, நகராட்சிக்குள் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது, ஆனால் நகராட்சிக்குள் கட்டுக்குள் வரவில்லை என்றும் தமிழகத்தில் சென்னையை தவிர்த்து கொரோனா வைரஸ் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.