நெல்லை மாவட்டத்தில் மணல் திருட்டை தடுக்க முயன்ற எஸ்ஐ பார்த்திபன் மீது சங்கர், மணிகண்டன் ஆகியோர் அரிவாளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
நேற்று இரவு நெல்லை மாவட்ட பழவூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் பார்த்திபன் அம்பலவாணபுரம் பகுதியில் ரோந்து பணியில். அப்போது அந்த பகுதியாக சங்கர் மணிகண்டன் ஆகியோர் டெம்போவில் மணல் கடத்தி வந்துள்ளதாக தெரிகிறது.
அந்த டெம்போவை சோதனையிட்டு , அனுமதி சீட்டை எஸ்ஐ பார்த்திபன் சரிபார்த்துள்ளார். அப்போது, சங்கர் மணிகண்டன் ஆகிய இருவரும் அரிவாளால் எஸ்ஐ பார்த்திபனை வெட்டியுள்ளனர். தடுக்க முயன்ற இன்னொரு காவலரையும் இவர்கள் தாக்கியுள்ளதாக தெரிகிறது.
அதில் எஸ்ஐ பார்த்திபன் காயம்பட்டு இருந்தாலும், குற்றவாளிகளை மடக்கி பிடித்துள்ளார். அந்த நேரம் தகவலறிந்து மற்ற காவலர்கள் விரைந்து வந்து சங்கர் , மணிகண்டனை மடக்கி பிடித்துள்ளனர்.
வெட்டுப்பட்ட எஸ்ஐ பார்த்திபன் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே போல, சங்கர், மணிகண்டன் எனும் இருவர் மீதும் கூடன்குளம் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…