ஈரோடு இடைத்தேர்தல்: வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன் நிறைவுபெற்றது. அதன்படி, வேட்பு மனுத் தாக்கல் நேற்று பிற்பகல் 3 மணிக்கு நிறைவு பெற்றது.
திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 56 பேர் நேற்று ஒரே நாளில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
வரும் 20ஆம் தேதிக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளான அதிமுக, தேமுதிக, பாஜக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என்பதால், திமுக Vs நாதக போட்டியாக தேர்தல் களம் மாறியுள்ளது.