டிஎன்பிஎஸ்சி – பாடத்திட்டத்தில் திருக்குறள் நீக்கம்! மாணவர்கள் அதிர்ச்சி!
TNPSC Group II Main பாடத்திட்டத்தில் 2019-ல் இடம் பெற்றிருந்த திருக்குள் பகுதி தற்போது நீக்கம்.
டிஎன்பிஎஸ்சி (TNPSC) அறிவிக்கை செய்யப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழித்தாள் கட்டாயமாக்கப்பட்டு, தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்த நிலையில், அதன் அடிப்படையிலான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் TNPSC இணையதளத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
தமிழ் மொழித் தாளுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள்:
இந்த நிலையில், TNPSC வெளியிட்டுள்ள Group II Main பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் பகுதி நீக்கம் செய்யப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் இடம்பெற்றிருந்தது. நேற்று வெளியிடப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் திருக்குறள் இடம்பெறவில்லை என்பது மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.