கொளுத்தும் வெயில் – கழக நிர்வாகிகளுக்கு முக்கிய வேண்டுகோள் : டிடிவி
தமிழகம் முழுவதும் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் திறந்திட டிடிவி தினகரன் வேண்டுகோள்.
கோடை வெயில் கொளுத்தும் நிலையில், கழக நிர்வாகிகளுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கியமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கோடை வெயிலின் தாக்கத்தால் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் அதிகரித்து வருகிறது. மேலும், வெயிலின் தாக்கம் வருங்காலங்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இச்சூழலில், சாலைகளில் செல்லும் பொதுமக்களை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் திறந்திட வேண்டுகிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கண்மணிகளின் இந்தப் பணி, பாதசாரிகளுக்கும், இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கும் உதவியாக அமைந்திட வேண்டும். அதற்குத் தகுந்த இடங்களைத் தேர்வு செய்து தண்ணீர் மற்றும் நீர் மோர்ப் பந்தல்களை நிறுவிட வேண்டுகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
சாலைகளில் செல்லும் பொதுமக்களை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் திறந்திட வேண்டுகிறேன். pic.twitter.com/dAL2DoYX0l
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 4, 2023