கொரோனா குறைந்ததால் ஜூலை 3-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் – ஆசிரியர் சங்கம் 

Default Image

கொரோனா குறைந்து வருவதால் தமிழகத்தில் ஜூலை 3-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என முதல்வருக்கு, தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழகத்தில், கொரோனா வைரஸின் பாதிப்பு சமீப நாட்களாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா குறைந்து வருவதால் தமிழகத்தில் ஜூலை 3-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும். கல்வி தேவை, மாணவர் நலன்கருதி நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு, தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், பள்ளிகளை திறக்கும்போது மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்