அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் பெயர்களை விளம்பர நோக்கில் பள்ளிகள் பயன்படுத்த கூடாது!பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் பெயர்களை விளம்பர நோக்கில் பள்ளிகள் பயன்படுத்த கூடாது என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் இன்று வெளியானது.
ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயத்தில் மாணவர்கள் மனஉளைச்சல் காரணமாக தவறான முடிவுகள் எடுக்க நேரிடுகிறது.இதனால் தமிழக பள்ளிகல்வித்துறை தரவரிசை பட்டியலை வெளியிடாமல் தவிர்த்து வருகின்றது.இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில், 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் பெயர்களை விளம்பர நோக்கில் பள்ளிகள் பயன்படுத்த கூடாது. மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது பள்ளி கல்வித்துறை.