586 நாட்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு அதிரடியான வரவேற்பு.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து வந்த நிலையில், இந்த தொற்று பாதிப்பு தொடர்ந்து வந்த நிலையில், கடந்த 500 நாட்களுக்கும் மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், செப்.1-ஆம் தேதி முதல் 9-12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதனையடுத்து, நவ.1-ஆம் தேதி முதல் 1-8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் 1-8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
இன்று பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட மாட்டாது. அதற்கு பதிலாக மாணவர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதுதவிர மன மகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்கள் புத்தாக்க பயிற்சி கட்டகங்கள் முதன்மைப் படுத்தப் பட்ட பாடத் திட்டங்கள் போன்றவை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
15 நாட்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் போன்ற மனமகிழ்ச்சி செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள், வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பல மாதங்களுக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, மாவிலை தோரணம், வாழைமரங்களை கட்டி பல்வேறு வகையான அலங்கரிப்புகளுடன் ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர். மாணவர்களும் இன்று உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு மொழிகள் கடந்து உலகம்…
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல்…
டெல்லி : நேற்றைய (ஏப்ரல் 13) ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டி…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…